ரூ 35,400 -- 1,12,400 சம்பளத்தில் கோவா IIT யில் இளநிலை கண்காணிப்பாளர் பணி - ஆசிரியர் மலர்

Latest

 




30/05/2020

ரூ 35,400 -- 1,12,400 சம்பளத்தில் கோவா IIT யில் இளநிலை கண்காணிப்பாளர் பணி


கோவா - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை கண்காணிப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 
இப்பணியிடங்களுக்கு பி.இ சிவில் பொறியியல், பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


இப்பணியிடத்திற்கு ரூ.1.12 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், கோவா

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை கண்காணிப்பாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : பி.இ.சிவில் பொறியியல், பி.இ, பி.டெக், எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது
.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.iitgoa.ac.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iitgoa.ac.in  குறிப்பிடப்பட்டுள்ள லிங்க்கை காணவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459