மேற்கு வங்காளத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மேற்கு வங்காளத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை


மேற்கு வங்காளத்தில் ஜூன் 10-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி நேற்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
உம்பன் புயல் தாக்குதலால் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.700 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்கள் இடிந்துள்ளன. வேறு பள்ளிக்கூடங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தனிமை முகாம்களாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் மூடியே இருக்கும்.
12-ம் வகுப்பு தேர்வுகள், திட்டமிட்டபடி ஜூன் 29, ஜூலை 2, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a comment