பிளஸ் 2-க்கு பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பிளஸ் 2-க்கு பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’


பிளஸ் 2-க்கு பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி மே 31-ல் தொடக்கம் 

பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்க லாம் என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ இணையவழி ஆலோசனை நிகழ்ச்சி வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. 

ஊரடங்கு அமலில் உள்ள நிலை யில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மாணவர்களுக்காக வானியல் முகாம், அபாகஸ் முகாம், விவசாய முகாம் (லிட்டில் ஃபார்மர்), எதிர் கால உயர்கல்வி, வேலைவாய்ப் புக்கான உரையாடல் என பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக முன்னெடுத்து வருகிறது.

இதற்கிடையே, அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்க லாம், எந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்பு அதிகம் என பிளஸ் 2 மாண வர்களிடம் கேள்விகள் எழும். இந் தக் கேள்விகளுக்கான பதில்களை தருவதோடு, மாணவர்களுக்கு பய னுள்ள வழிகாட்டுதலை வழங்கும் விதமாக, ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆலோசனை நிகழ்ச்சியை இணையத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்க உள்ளது. 

இந்தத் தொடர் கூட்டத்தின் முதல் அமர்வு வரும் 31-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்க உள்ளது. இதில், ‘உயர்வுக்கு வேளாண் கல்வி’ என்ற தலைப்பில் வேளாண்மை கல்வியின் முக்கி யத்துவம் குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், வேளாண்மை உற்பத்தி ஆணை யருமான ககன்தீப் சிங் பேடி, விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், அமிர்தா ஸ்கூல் ஆஃப் அக்ரிகல்சரல் சயின்ஸின் தலைமை ஆராய்ச்சியாளர், பேராசிரியர் மற்றும் முதுகலை திட்டத் தலைவரான டாக்டர் சுதீஷ் மனலில் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். 

No comments:

Post a comment