11 நகரங்களில் மட்டும் மே 31ம் தேதிக்குப்பிறகு ஊரடங்கு - ஆசிரியர் மலர்

Latest

27/05/2020

11 நகரங்களில் மட்டும் மே 31ம் தேதிக்குப்பிறகு ஊரடங்கு

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகளை கொண்ட 11 நகரங்களில் மட்டும் மே 31ம் தேதிக்குப் பிறகு 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வரும் 31ம் தேதி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது
. தற்போது அமலில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும். கொரோனா பாதிப்பு தற்போதும் வேகமாக பரவி வருவதால் 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகளை கொண்ட 11 நகரங்களில் மட்டும் மே 31ம் தேதிக்குப்பிறகு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, மும்பை, டில்லி, பெங்களூரு, கோல்கட்டா, ஆமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், இந்தூர் மற்றும் சூரத் ஆகிய 11 நகரங்களில் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து வரும் 31ம் தேதி(ஞாயிறு) ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459