TNPTF மாநில மையச் செய்தி* *பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:27.04.2020* - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

TNPTF மாநில மையச் செய்தி* *பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:27.04.2020*

கோப்புப்படம்*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்.*

*தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுத்து நிறுத்தப் பல தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றையும் விட உயிர் முக்கியமானது என்பதால் உயிர்க்கொல்லி நோயை ஒழித்திட ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலையில் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பது கூட கொரோனா நோயைக் கட்டுப்படுத்தும் தலைசிறந்த தனிமனித போராட்ட வடிவம் ஆகும்*

*இதில் குறிப்பிடத்தக்க, கவலைக்குரிய நிலை என்னவென்றால் இந்த விஷயத்தில் ஏழை மக்கள் படும்பாடு மிகப் பெரிய துயரத்திற்கு உரியதாகும்."உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி"என்று சொல்வார்கள்.அதைப் போல கொரோனாவிலிருந்து உயிர் பிழைக்க வேண்டியது ஒருபக்கம்; வருமானம் இழந்ததால் ஏற்பட்ட வறுமையின் பிடியில் இருந்து உயிர் பிழைக்க வேண்டியது மறுபக்கம்*

*தமிழ்நாட்டின் இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலோர் விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்தான். எனவே,வறுமையின் கோரப் பிடி எவ்வாறு இருக்கும் என்பது இன்றைய ஆசிரியர் சமூகத்திற்கு நன்றாகத் தெரியும்.எனவேதான் தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் நம் பேரியக்கமாம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடந்த இருபது தினங்களாக மாநிலம் முழுவதும் வறிய
மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டி ருக்கிறது.*

*மாநிலம் முழுவதும் தொண்டுள்ளம் கொண்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள், ஈகை குணமும் இரக்க சிந்தனையும் கொண்ட ஆயிரக்கணக்கான நல்லவர்கள் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அதில் நமது இயக்கத் தோழர்களின் கைமாறு கருதாத களப்பணி காண்போரை வியக்க வைத்துள்ளது*

*மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட, வட்டார,நகரக் கிளைகளின் உதவிகளும்,தனி நபர்களாக நம் இயக்கத் தோழர்கள் செய்துவரும் உதவிகளும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.*

*திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டாரக் கிளை மட்டும் அந்தப்பகுதியில் உள்ள வறிய மக்களுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது என்றால் அந்த நிதியைத் திரட்டுவதற்கு அந்த வட்டாரக்கிளைத் தோழர்கள்
எவ்வளவு முயற்சியை மேற்கொண்டு இருப்பார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.*

 *இன்றுவரை (27.04. 2020) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டார,நகரக் கிளைகளின் சார்பில் மாநிலம் முழுவதும் 75 லட்சம் ரூபாய் அளவிற்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ள தகவல் மாநில மையத்திற்குக் கிடைத்துள்ளது.மேலும், மாவட்டச்செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் நம் இயக்கத்தின் சார்பில் நடைபெறும் உதவிப் பணிகள் தொடர்பான செய்திகளை அன்றைய தினமே மாநில அமைப்பின் அதிகாரப்பூர்வ
கட்செவி குழுவான "TNPTF மாநில அமைப்பு" என்ற கட்செவி குழுவில் தவறாது பதிவிட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது*

 *அத்துடன் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் உதவிப் பணிகள் தொடர்பான செய்திகள் புகைப்படங்களை tnptfithal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தவறாது அனுப்பிடவும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. உதவிப் பணிகள் முடிந்த பின்பு ஒட்டுமொத்தமாக தங்கள் மாவட்டத்தில் நடைபெற்ற உதவிப் பணிகள் விவரம், அதற்காகச் செலவிடப்பட்ட தொகை, பயன் பெற்ற நபர்கள் உள்ளிட்ட விவரங்களைத் தொகுத்து விரிவான அறிக்கையை  அளித்திட மாவட்டச் செயலாளர்களை மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது*

 *கடந்த இரண்டு தினங்களாக (26.04.2020&27.04.2020) உதவி பணிகளில் ஈடுபட்ட நம் பேரியக்கக் கிளைகள் பின்வருமாறு*

*(1)கடலூர் மாவட்டம்- பண்ருட்டி வட்டாரக்கிளை*
*(2)திருப்பூர் மாவட்டக் கிளை*

*(3) ராமநாதபுரம் மாவட்டம்-கமுதி,கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி வட்டாரக் கிளைகள்*
*(4) கன்னியாகுமரி மாவட்டம்-நாகர்கோவில்,ராஜாக்கமங்கலம் வட்டாரக் கிளைகள்* *(5) திருவண்ணாமலை மாவட்டம்-திருவண்ணாமலை, செய்யாறு வட்டார,நகரக் கிளைகள்*
*(6)தேனி மாவட்டம்-கடமலை மயிலை,பெரியகுளம் வட்டாரக்கிளைகள்*
*(7) கரூர் மாவட்டம்- கரூர் மாவட்ட கிளை மற்றும் தாந்தோனி வட்டாரக்கிளை*
*(8) சிவகங்கை மாவட்டம்-சிங்கம்புணரி வட்டாரக்கிளை
*
*(9)புதுக்கோட்டை மாவட்டம்-அரிமளம் வட்டாரக்கிளை*
*(10)ஈரோடு மாவட்டம்- நம்பியூர் வட்டாரக்கிளை*
*(11) திண்டுக்கல் மாவட்டம்- கொடைக்கானல் வட்டாரக்கிளை*

*உதவிப்பணிகளில் ஈடுபடும்
தோழர்கள் உரிய அலுவலர்களிடம் தெரிவித்தும்,உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சமூக விலகலைக் கடைப்பிடித்து செயல்பட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது*

*தோழமையுடன்*
*ச.மயில்*
*பொதுச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*