JEE மற்றும் NEET தேர்வுகள் எப்போது? - மத்திய அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




20/04/2020

JEE மற்றும் NEET தேர்வுகள் எப்போது? - மத்திய அரசு அறிவிப்பு


டெல்லி: ஜூன் மாதத்தில் நீட் மற்றும் JEE தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே மாத இறுதியில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு தேதி தள்ளிப்போவதால் வளாக நேர்காணலில் தேர்வான மாணவரின் பணியானை ரத்து செய்யக்கூடாது.
இந்நிலையில், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்று தேர்வுக்குப் பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவர்களிடையே குழப்பம் நீடித்து வந்தது. இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஜூன் மாதத்தில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்
தேர்வு வாரியங்கள், ஐ.ஐ.டி.கள் மற்றும் இதர அமைப்புகளுடன் தேர்வு நடத்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் நலன் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தள்ளிப்போன காரணத்தினால், கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வான மாணவர்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு வேலை வாய்ப்பையும் திரும்பப் பெற வேண்டாம் என்று நிறுவனங்களிடமும் ரமேஷ் பொக்ரியால் கேட்டுக்கொண்டுள்ளார்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459