இந்தியாவில் 80% பேருக்கு அறிகுறிகள் இன்றி கரோனா - இந்திய மருத்துவ கவுன்சில் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவில் 80% பேருக்கு அறிகுறிகள் இன்றி கரோனா - இந்திய மருத்துவ கவுன்சில்



இந்தியாவில் 80% பேருக்கு அறிகுறிகள் இன்றி கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. 
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,265 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 543 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் கரோனா அறிகுறிகள் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் இது மிகவும் கவலைக்குரியது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளதாக தங்கவல் வெளியாகியுள்ளது. 
முன்னதாக, மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 70 முதல் 75 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். அதேபோன்று, தில்லியில் நேற்று கரோனா உறுதியான 186 பேருக்கும் கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.