கொரோனாவை விட மோசமான பாதிப்பு வரலாம் : இந்தியவிற்கு எச்சரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 27 April 2020

கொரோனாவை விட மோசமான பாதிப்பு வரலாம் : இந்தியவிற்கு எச்சரிக்கை


உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவை கொரோனாவை விட மோசமான ஒன்று தாக்க இருப்பதாக ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்துத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் விவசாயம் பல பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு முடிந்து விவசாயத்திற்கு திரும்பலாம் என விவசாயிகள் பலர் காத்துள்ள நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலை ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளாண் பொருட்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி ஆப்பிரிக்காவிலிருந்து கூட்டமாக கிளம்பும் வெட்டுக்கிளிகள் ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக கடந்து இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவை இந்தியாவிற்கு வரும் பட்சத்தில் விவசாய பயிர்களை அழித்து பெரும் நாசத்தை விளைவிப்பதுடன், பெரும் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில்
இதுபோன்ற வெட்டுக்கிளிகள் ஏற்கனவே கூட்டம் கூட்டமாக வயல்களை நாசப்படுத்துவது ஏற்கனவே நடந்துள்ளது. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகளால் இந்தியாவிற்கு ஆபத்து உள்ளதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.