தமிழகத்தில் 110 குழந்தைகளுக்கு பெற்றோர்களிடம் இருந்து கொரோனா பரவியது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 27 April 2020

தமிழகத்தில் 110 குழந்தைகளுக்கு பெற்றோர்களிடம் இருந்து கொரோனா பரவியது


தமிழகத்தில், கொரோனா தொற்று இருப்பவர்களிடமிருந்து 59 சிறுவர்கள் மற்றும் 51 சிறுமிகளுக்கு கொரோனா பரவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 26ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 1,885 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் 42 வயது மதிக்கத்தக்க வாலிபர் மரணமடைந்ததன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாமக்கல்லை சேர்ந்த 5 வயது சிறுவன், சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன், மதுரையை சேர்ந்த எட்டு வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் மற்றும் 9 மற்றும் 11 வயது
சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று உள்ளவர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமிருந்தோ இவர்களுக்கு தொற்று பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உள்ள ஒருவரிடமிருந்து 13 பேருக்கு தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், புதிதாக 28 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் புதிதாக 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகரில் 7, நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் 4, திருப்பூரில் 2, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம்,
சேலம் மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள 110 குழந்தைகள் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் இவர்களில் 59 பேர் சிறுவர்கள் என்றும் 51 பேர் சிறுமிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களில் 1,554 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில், 1,062 பேர் ஆண்கள் என்றும் 492 பேர் பெண்கள் ஆவர்
தொற்று ஏற்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64 பேர் பெண்கள், 157 பேர் ஆண்கள் ஆவர்.
குணம் அடைந்து 60 பேர் வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து 13 பேரும், திருவாரூரிலிருந்து 12 பேர், சென்னை ராஜீ்வ் காந்தி மருத்துவமனையிலிருந்து 9 பேர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலிருந்து 10 பேர் , மதுரையிலிருந்து 8 பேர்,
கன்னியாகுமரி மருத்துவமனையில் இருந்து 2 பேர் வீடு திரும்பியுள்ளனர். தனியார் மருத்துவமனையிலிருந்து 6 பேர் வீடு திரும்பியுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆன இவர்கள் 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
29,056 பேர் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 26 பேர் அரசு மருத்துவமனைகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,838 பேர், தனிமை வார்டுகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.