அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்திவைப்பு - தமிழக அரசு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 27 April 2020

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்திவைப்பு - தமிழக அரசு

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
சென்னை:
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஏராளமான நிதி செலவிடப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. 
இந்நிலையில், தமிழகத்தில்
அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைப்பதாக அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவதும் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நிறுத்திவைக்கப்படுகிறது.
Click here to read Da Go
முன்னதாக அரசு ஊழியர்களிளின் ஈட்டிய விடுப்பு சம்பளத்தை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.