கொரோனா விசாரணைக்கு சீனா சென்ற அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 20 April 2020

கொரோனா விசாரணைக்கு சீனா சென்ற அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுப்பு


வுஹான்: .
கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்தத் தங்களது குழுவை வுஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கோரிக்கையைச் சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்திருக்கும் நிலையில், வைரஸ் பற்றிய போதிய தகவல்களைச் சீனா பகிரவில்லை என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிவதற்காக தங்களது
விசாரணைக் குழுவை வுஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷுவாங், ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் கொரோனா வைரஸ் பொது எதிரியாக இருக்கிறது எனக் கூறினார்.
எந்த நேரத்திலு‌ம் உலகின் எந்தவொரு நாட்டிலும் அந்த வைரஸ் தோன்றலாம் என்றும், எனவே இந்த விவகாரத்தில் சீனாவைக் குற்றம்சாட்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

வைரஸை சீனா உருவாக்கிப் பரப்பிவிடவில்லை என்பதை அமெரிக்கா உணர வேண்டும் எனத் தெரிவித்த ஷுவாங், வைரஸ் பரவிய நாள் முதல் அது தொடர்பான தகவல்களை உலக நாடுகளிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.