கல்வி கட்டணம் செலுத்த கட்டாய படுத்தக்கூடாது. தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 21 April 2020

கல்வி கட்டணம் செலுத்த கட்டாய படுத்தக்கூடாது. தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை


சென்னை,
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 
இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.
இதேபோன்று பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டு
உள்ளன.  இந்நிலையில், சில பள்ளிகள்  மற்றும் கல்லூரிகள், கல்வி கட்டணம் செலுத்தும்படி மாணவர்களை வற்புறுத்தி வருகிறது என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதுபற்றி தமிழக அரசு விடுத்துள்ள செய்தியில், சில பள்ளி, கல்லூரிகள் கட்டணம் செலுத்த சொல்லி வற்புறுத்துவதாக புகார் வருகிறது.  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கல்வி கட்டணம்
செலுத்த வற்புறுத்த கூடாது.  எச்சரிக்கையை மீறி கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.