கொரோனா வைரஸை அழிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கண்டு பிடிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




05/04/2020

கொரோனா வைரஸை அழிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கண்டு பிடிப்பு


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோனாஷ் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் கெய்லி வாக்ஸ்டாப் கூறியதாவயது:- இந்த மருந்தின் ஒரு டோஸ் அனைத்து வைரஸின் அனைத்து மரபணு பொருட்களையும் முழுமையாக  (ரிபோநியூக்ளிக் அமிலம் ) 48 மணிநேரத்திற்குள் அகற்ற முடியும் என்பதையும், 24 மணி நேரத்தில் கூட அதில் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைவதனையும் நாங்கள் கண்டறிந்தோம்  வைரஸில் ஐவர்மெக்டின் மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும், இந்த மருந்து வைரஸை அழிப்பதற்காக உயிரணு திறனைக் குறைக்கும். நாங்கள் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர் கொண்டிருக்கிறோம். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை இல்லை. இவ்வாறான காலங்களில், உலகெங்கிலும் ஏற்கனவே கிடைத்த ஒரு மருந்து கலவை எங்களிடம் இருந்தால், அது விரைவில் மக்களுக்கு உதவக்கூடும் தடுப்பூசி பரவலாகக் கிடைப்பதற்கு முன்னதாகவே இந்த மருந்து உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்
. இதைதொடர்ந்து அடுத்த கட்டமாக இந்த மருந்து மனிதர்களுக்கு கொடுக்க தகுந்த சரியான அளவை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மனிதர்களின் உடலுக்கு எந்த அளவு மருத்து பாதுகாப்பான  ஆராயப்பட்டு வருகின்றது. ஐவர்மெக்டின் என்பது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும்.இது எச்.ஐ.வி தொற்று, டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது என கூறப்படுகின்றது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459