ஈரோட்டில் மட்டும் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு - அதிர்ச்சி கொடுத்த ஆட்சியர் கதிரவன் - ஆசிரியர் மலர்

Latest

 




05/04/2020

ஈரோட்டில் மட்டும் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு - அதிர்ச்சி கொடுத்த ஆட்சியர் கதிரவன்


கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் நாளுக்கு நாள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளை… சுகாதார துறையினர் மற்றும் அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவு:
முக்கியமாக மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதை கட்டுப்படுத்தினால், கொரோனா முடிவுக்கு வரும் என்கிற நம்பிக்கையில், இந்தியா முழுவதும் 144 தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் அறிவுறுத்தல்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பேருந்து, ரயில் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி கடைகளில் கூட சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம்:
தமிழ்நாட்டில் தற்போது தனது கோர முகத்தை காட்டி வரும், கொரோனா வைரசால் 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு நிலவரம்:
சென்னையை அடுத்து ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள்
தான் அதிகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 லட்சம் பேர் கண்காணிப்பு:

இதை தொடர்ந்து, 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களை தனிமை படுத்தி கண்காணித்து வருவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். வெளிநாடு, வெளிமாவட்டத்தில் இருந்து ஈரோடு பகுதிக்கு வந்தவர்கள் மட்டும் இன்றி, தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், மற்றும் அவர்கள் வசித்து வந்த பகுதியை சேர்ந்தவர்களையும் தனிமை படுத்தி கண்காணித்து வருகின்றனர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459