பிரதமர் நரேந்திர மோடியிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஆசிரியர் மலர்

Latest

05/04/2020

பிரதமர் நரேந்திர மோடியிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அமெரிக்க அதிபர் டிரம்ப்


வாழிங்டன்: அமெரிக்‍காவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 452 ஆக அதிகரித்துள்ளதால் அடுத்து வரும் 2 வாரங்களுக்கும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதிக்கான தடையை தளர்த்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
சீனாவின் வூஹானில் இருந்து 220-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு, வல்லரசு நாடான அமெரிக்காவில்  இதுவரை 8 ஆயிரத்து 452 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்து 828 பேர் குணமடைந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் சிகிச்சைக்கு ஹைட்ராக்‍ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுவதாக வெளியான தகவலையடுத்து, அந்த வகை மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி பயன்படுத்தக்‍கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது . மேலும், இந்த மருந்தை மத்திய அரசு அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்து என்று அறிவித்து அதன் ஏற்றுமதிக்கும் தடை விதித்தது. 
அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சம்பவம் அமெரிக்கா வாழ்மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
இந்த நிலையில் அமெரிக்‍காவில் கரோனா உயிரிழப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளதால், அடுத்த 2 வாரங்களுக்‍கு மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி நாட்டு மக்களுக்கு டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய அதிபர் டிரம்ப், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துமாறும், அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ள மாத்திரைகளை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். 

தனது மருத்துவர்களின் ஆலோசனைக்குப்பின்பு தானும் இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தப்போவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப்,  இந்தியா இந்த மருந்துகளை அதிகமாக உற்பத்தி செய்வதாகவும், இது இங்கு அதிக மக்களுக்கு தேவைப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த மாத்திரையின் தேவை இருப்பதை தாம் அறிந்திருப்பதாகவும், எனினும் தாங்கள் கேட்ட அளவிலான மாத்திரைகளை அவர்கள் வழங்கினால் தாம் பாராட்டுவதாகவும் டிரம்ப் கூறினார். 
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கரோனா நோய்த்தொற்று தடுப்பு மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். 
இதுகுறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒரு விரிவான கலந்துரையாடலைத் தான் மேற்கொண்டதாகவும், இந்தியா, அமெரிக்கா கூட்டாட்சியின் முழு பலத்தினையும் பயன்படுத்தி, அமெரிக்காவுக்கு உதவ முயல்வதாக குறிப்பிட்டுள்ளார். 
மேலும், அமெரிக்காவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக மீண்டு வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, சர்வதேசிய அளவில் நாடுகளுக்கிடையிலான மருந்துகள் பரிவர்த்தனை மூலம் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இயலும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459