விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கரோனா தொற்று - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 26 April 2020

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கரோனா தொற்று


விருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 25 பேர் கரோனதொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 10 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிவிட்டனர். இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள கன்னிசேரி புதூர் குமாரபுரம் சூலக்கரை குல்லூர்சந்தை முதலான கிராமங்களை சேர்ந்த 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இதையடுத்து இக்கிராமங்கள் உள்ள பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கிராமத்திற்கு செல்லும் வழிகளை அடைத்து விட்டனர். குளக்கரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டில் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.