கொரோனாவும், அதன் தொடர்ச்சியான லாக் டௌனும்
நம் எல்லோருக்கும் புது அனுபவங்கள்… நிர்ப்பந்திக்கப்பட்ட இந்த முடக்கம் பல வீடுகளில் குடும்ப வன்முறை அதிகரிக்க காரணமாயிருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள். மற்றொரு பக்கம், வீட்டில் வேலைப்பளு அதிகரித்துவிட்டதென குற்றச்சாட்டு வைக்கின்றனர் பெண்கள். வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பதால், முன்பைவிடவும், இப்போது மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது எல்லோருக்கும்.

இந்த மனஅழுத்தப் போரில், பெரியவர்கள் மட்டுமல்ல, சிறியவர்களும்கூட சிக்கித்தவிக்கின்றனர் என்கிறது சமீபத்திய ஒரு செய்தி. ஏற்கெனவே டிஜிட்டல் உலகத்தில் மூழ்கிக்கிடந்த டீன் ஏஜ் பிள்ளைகளை,
இந்த முடக்கம், இன்னும் தனிமைக்குள் தள்ளுகிறது. வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கும் ஒரே வடிகாலாக மாறியிருக்கிறது டிஜிட்டல் உலகம்.
இந்த முடக்கம், இன்னும் தனிமைக்குள் தள்ளுகிறது. வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கும் ஒரே வடிகாலாக மாறியிருக்கிறது டிஜிட்டல் உலகம்.
இப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் டீன் ஏஜ் குழந்தைகளை, டிஜிட்டலுக்குள்ளும் மூழ்கிவிடாமல் – தனிமை சிக்கல்களுக்கும் சென்றுவிடாமல் காக்க பெற்றோர் என்னவெலாம் செய்யலாம்.
குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் பேசினோம்.
“குழந்தைகள் வளர வளர, அவர்களுக்கான பிரத்யேக குணங்களும் வளரும். இந்த வளர்ச்சி, டீன் ஏஜில் இருந்துதான் தொடங்கும். தங்களுக்குள் ஏற்படும் அப்படியான மாற்றங்களை, தொடக்க காலத்தில், பிள்ளைகளுக்கு கையாளத் தெரியாது. செய்வதறியாது தவிக்கும்போது, தன்னைப்போலவே இருக்கும் நண்பர்களை நாடுவர். பெற்றோர் சூழலை புரிந்து கொள்ளாவிட்டால், எரிந்து விழுவார்கள்… இந்த லாக் டௌன், நண்பர்களிடமிருந்தும் அவர்களைப் பிரித்து வைத்திருப்பதால், பெற்றோரிடம் கடுமையாக நடந்துக்கொள்வர். இந்தச் சூழலில் பெற்றோர்தான் இறங்கி வந்து பிள்ளைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி புரிய முயலும், பெற்றோருக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
அதில் முக்கியமானது, குழந்தைகள் பேசுவதை பெற்றோர் முழுமையாகக் கேட்க வேண்டும். முக்கியமாக, அவர்கள் சொல்லும் விஷயத்தை முழுமையாக கவனிக்க வேண்டும். எல்லாவற்றையும் கேட்ட பிறகு, அவர்கள் போக்கிலேயே போய் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

டீன் ஏஜ் பிள்ளைகள் கோபப்படும் போது, சில நிமிடங்களுக்குப் பெற்றோர் அவர்களை அப்படியே விட்டுவிடுவது நல்லது.குழந்தைகள் உளவியல் ஆலோசகர் பூங்கொடி பாலா
கொஞ்சம் நேரம் எடுத்து, அவர்கள் அமைதியான பிறகு, அவர்களிடம் பேச வேண்டும். `ஏன்பா கோபப்பட்டே’ எனப் பொறுமையாகக் கேட்டு, `நான் உன்னைப் புரிஞ்சிக்கிறேன்’ எனச் சொல்ல வேண்டும்.
டீன் ஏஜ் குழந்தைகளிடம், எதற்கும் எப்போதும் பெற்றோர் ரூல்ஸ் போடக்கூடாது.
எதுவாக இருந்தாலும், பொறுமையாகப் பேசுவது அவசியம். டீன் ஏஜ் குழந்தைகள் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, அவர்கள் டிஜிட்டலிலேயே மூழ்கிவிடுகிறார்கள் என்பதுதான். டிஜிட்டல் மோகத்திலிருந்து அவர்களை வெளிக்கொணர, நிஜ உலகை அவர்களுக்குக் காட்ட வேண்டியது அவசியம். அதற்கு, முதலில் அவர்களை வீட்டிலுள்ளவர்களோடு நேரடியாக இணைக்க வேண்டும். அதற்கு வீட்டு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவது, சிறப்பான முன்னெடுப்பு.

குறைந்தபட்சம், அவர்களின் வேலைகளையாவது அவர்களே பார்த்துக்கொள்ள பெற்றோர் நிர்பந்திக்க வேண்டும். பள்ளி நாள்களில், ஸ்கூல் – ட்யூஷன் – மியூசிக் க்ளாஸ் என்று எப்போதும் பிஸியாகவே இருந்த குழந்தைகளுக்கு, வீட்டு வேலைகள் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது. ஆகவே பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து வேலை நேர்த்தியை எதிர்பார்க்காமல். பிள்ளைகளின் இம்பெர்ஃபெக்ஷன்களை அப்படியே ஏற்றுக்கொண்டு ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
சாப்பாடு விஷயத்தில், அடம் பிடிக்கும் குழந்தைகள் மற்றும் புதுமையான விஷயங்களை எதிர்பார்க்கும் குழந்தைகளை, சுயமாகச் சமைக்கச் சொல்லுங்கள். வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், அதைப் பராமரிக்க குழந்தையைப் பழக்கலாம்
. இது அடம் பிடிக்கும் குணத்தை போக்குவதோடு, அவர்களின் தனித்திறமையை வளர்க்கவும் உதவும்.
. இது அடம் பிடிக்கும் குணத்தை போக்குவதோடு, அவர்களின் தனித்திறமையை வளர்க்கவும் உதவும்.
கேட்ஜெட்ஸ் உபயோகிக்கிற குழந்தைகளுக்கு, தூக்க நேரம் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது பார்த்துக்கொள்ள வேண்டும். பகலில் அளவோடு கேட்ஜெட்ஸை உபயோகிக்கும் பிள்ளைகள் இரவில் இயல்பாக உறக்கத்துக்குச் சென்றுவிடுவர்.
அதிக நேரம் குழந்தை மொபைல் உபயோகித்தால், உபயோகத்தை நிறுத்தச் சொல்வதைவிடவும், `கொஞ்சம் பிரேக் எடுக்கச் சொல்வது நல்லது.
ஆன்லைன் வகுப்புகளுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதை அட்டவணையாகத் தந்துவிட்டு, அதை பெற்றோர் மேற்பார்வை மட்டும் செய்வது போதுமானது. மற்றபடி, கட்டுப்பாடுகள் எதுவும் வேண்டாம்.
மொபைலில் அதிகமாக வீடியோ பார்க்கும் குழந்தைகளோடு, பெற்றோரும் சேர்ந்து வீடியோ பார்க்கப் பழகலாம். எந்த வீடியோவை குழந்தை பார்க்க வேண்டுமென்பதை, நீங்கள் முடிவு செய்யுங்கள்.
தலைவர்களின் வரலாறுகளை வீடியோ வடிவில் சொல்லிக்கொடுப்பது – மோட்டிவேஷனல் விஷயங்களைப் பார்க்க வைப்பது போன்றவற்றை ஊக்கப்படுத்தலாம்.
தலைவர்களின் வரலாறுகளை வீடியோ வடிவில் சொல்லிக்கொடுப்பது – மோட்டிவேஷனல் விஷயங்களைப் பார்க்க வைப்பது போன்றவற்றை ஊக்கப்படுத்தலாம்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் – உறவுகளோடு பதின்பருவ குழந்தைகள் வீடியோ / ஆடியோ வடிவில் பேசி வருவது, உறவுகள் மீதான குழந்தையின் பிணைப்பை அதிகப்படுத்தும். குழந்தைகள், தங்கள் நண்பர்களோடு பேச விரும்பினால், அதை வீடியோ சாட்டாக அமைத்துக்கொண்டு, நீங்களும் அதில் பங்கெடுப்பது சிறப்பு.
எப்போதும் குழந்தைகளைத் தனியாக ஓரிடத்தில் உட்கார விட வேண்டாம். `தனியறையில்தான் இருப்பேன்’ என அடம் பிடிக்கும் குழந்தைகளை, அறையைப் பூட்டாமல் இருக்க அறிவுறுத்தலாம்.குழந்தைகள் உளவியல் ஆலோசகர் பூங்கொடி பாலா
அடிக்கடி பெற்றோர் எதேச்சையாக அவர்களைக் கண்காணிக்கலாம். மெள்ள மெள்ள அந்தக் குழந்தைகளையும் வெளியில் கொண்டுவர முயலவும்.
டிஜிட்டல் உலகிலிருந்து பிள்ளைகள் வந்துவிட்டாலே, அறையில் சிறைப்பட்டுக்கிடப்பதைப் பிள்ளைகள் தவிர்க்க ஆரம்பிப்பார்கள்!”.
டிஜிட்டல் உலகிலிருந்து பிள்ளைகள் வந்துவிட்டாலே, அறையில் சிறைப்பட்டுக்கிடப்பதைப் பிள்ளைகள் தவிர்க்க ஆரம்பிப்பார்கள்!”.