கொரோனா அச்சுறுத்தல். : ஏசி பயன்படுத்தும் வழிமுறைகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




26/04/2020

கொரோனா அச்சுறுத்தல். : ஏசி பயன்படுத்தும் வழிமுறைகள் வெளியீடு


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தொற்றைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே கொரோனா தொடர்பான ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
கொரோனா வைரஸின் ஆயுட்காலம் அது படிந்திருக்கும் பொருளுக்கு பொருள் வேறுபடுவதையும், தட்பவெப்பநிலைக்கு ஏற்ப வைரஸின் ஆயுட்காலம் மாறுபடுவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏசியை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று , ஏ.சி, பிரிட்ஜ் பொறியாளர்களுக்கான இந்திய சங்கம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
. அதன்படி அறையினுள் ஏசியின் வெப்பநிலையானது 24 டிகிரி செல்சியஸிலிருந்து 30 டிகிரி செல்சியசுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதத்திற்குள் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ஏசி இருந்தால் ஜன்னல்களை திறக்க மாட்டார்கள். ஆனால் கொரோனா பரவும் காலமாக இருப்பதால் அவ்வப்போது ஜன்னல்களை திறந்து வைத்து வெளிக்காற்று உள்ளே வர அனுமதிக்க வேண்டுமென அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஏசியில் பயன்படுத்தப்படும்
வடிகட்டியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏசிகள் இல்லாமல், மின் விசிறிகள் இருந்தாலும் ஜன்னல்களை திறந்து வைக்கலாம் என்றும், எக்சாஸ்ட் ஃபேன்’ இருந்தால், அதனையும் பயன்படுத்தி காற்றோட்டத்தை சீர்படுத்திக் கொள்ளவேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊரடங்கினால் செயல்படாமல் இருக்கும் நிறுவனங்களில் உள்ள ஏசிக்களை முறையான பராமரிப்புக்கு பின்னரே பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பயன்பாடு இல்லாததால் பூஞ்சை ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459