ஆன்லைன் வகுப்புகள் அவ்வளவு ஈசியில்ல மக்களே - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 26 April 2020

ஆன்லைன் வகுப்புகள் அவ்வளவு ஈசியில்ல மக்களேஸ்கூட்டியோ பஸ்ஸோ ஏதோ ஒண்ண புடிச்சு ஒரு வழியா சிரமப்பட்டு வகுப்பறைக்கு போய், டீச்சர் பாடம் எடுத்துக்கிட்டு இருக்கறப்போ அருமையான தூக்கம் ஒண்ணு வரும் பாருங்கன்னு’ இருந்த நிலைமை மாறி எல்லா மாணவர்களுக்கும் கொரோனா லாக் டௌன்ல ஆன்லைன்லதான் கிளாசஸ் நடந்துகிட்டு இருக்கு. புதிய அனுபவங்கிறதால, இந்த ஆன்லைன் கிளாசஸ் எப்படி இருக்கப்போகுதுங்குற ஆர்வமும் எதிர்பார்ப்புகளும் ஆரம்பத்துல ரொம்பவே இருந்தாலும்
அதுல ஏமாற்றங்களும் அதிர்ச்சிகளும் நிறைய இருக்கத்தான் செய்கின்றன. நாம எதிர்பார்த்தது ஒண்ணா இருக்கும், அங்க நமக்கு கிடைக்கிறது ஒண்ணா இருக்கும். அப்படி என்ன எதிர்பார்த்தோம்… என்ன நடந்தது..?
Expectation: பஸ் புடிச்சு ட்ராஃபிக்ல வந்ததுனாலதான் லேட்னு டெய்லி சொல்லுவாங்க. இனிமேல் இந்த பிரச்னையே இல்ல. ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணாம லாக் இன் செஞ்சு, பாடமா இருந்தாலும் சரி ஸ்டாஃப் மீட்டிங்கா இருந்தாலும் சரி கரெக்ட்டா ஆரம்பிச்சிடலாம்ன்னு கனவோட லாக் இன் பண்ணுவாங்க டீச்சர்ஸ்.
Reality: நிதர்சனம் என்னன்னா, குறைஞ்சது 5 நிமிஷமாவது லேட் ஆகிடும் எல்லாரும் லாக் இன் பண்ணி மீட்டிங்கை ஆரம்பிக்க
. மொத்த மீட்டிங்கையும் நிர்வகிக்கிற ஆசிரியருக்கு டெக்னாலஜி ஃபோபியா இருந்து தவறுதலான லிங்கை அனுப்பிட்டாருன்னா ஷெட்யூல் பண்ணின கிளாஸ் மொத்தமா டமாலு டுமீலுதான். இதுல நெட்வொர்க்கும் தன் பங்குக்கு நம்ம ஆன்லைன் கிளாஸ்ல பேஸ்கட் பால் ஆடினா, “ஹலோ, கேக்குதானு” கேக்குறதுலயே பாதி கிளாஸ் முடிஞ்சிடும். டெக்னாலஜியில் சில ஆசிரியர்கள் வீக்கா இருக்கறதால மாணவர்களுக்கு டபுள் ஃபன்தான்.