தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குதல் ஆணை வெளியீடு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குதல் ஆணை வெளியீடு.தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி பாராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் அந்தந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழகம் | பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 2020 ( ஒரு மாதத்திற்கு மட்டும் ) மாதத்திற்கான
ஊதியம் இணைப்பில் காணும் விவரப்படி வட்டாரக்கல்வி அலுவலர்களின் வங்கி கணக்குகளில் 18.04.2020 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட தொகையினை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு வழங்கி அதற்கான ஒப்புகை இரசீது பெற்று பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் ஆகியோரின் மேலொப்பத்துடன் 05.05.2020க்குள் இவ்வலுவலகத்தில் சமர்பிக்கவும் அதன் நகலினை சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இப்பணி நிதிசார்ந்த பணி என்பதால் , இப்பணியில் எவ்வித புகாருக்கும்
இடமளிக்காமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வட்டாரக்கல்வி அலுவலர்கள் மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.