அரசு ஊழியர்ளுக்கு ஆரோக்கிய சேது கட்டாயம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 29 April 2020

அரசு ஊழியர்ளுக்கு ஆரோக்கிய சேது கட்டாயம்

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், 'ஆரோக்கிய சேது' என்ற செயலியை கண்டிப்பாக பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் கட்டாயம் என்றும்,
வீட்டிலிருந்து கிளம்பும் முன், அந்த செயலி மூலம், அப்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலி மூலம் ஓரளவு அபாயம் என்று தெரியவந்தால் அலுவலகத்திற்கு வரக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது
. இதனை அந்தந்த அமைச்சகங்களின் அதிகாரிகள் கண்காணித்து வழிநடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசின் கீழ் வரும், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தனி சுற்றறிக்கை மூலம் வலியுறுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரோக்கிய சேது செயலி என்பது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் இருக்கும் பகுதியை காண்பிக்கும் வசதி கொண்டது