கொரோனா எதிரொலியால், மாணவர்களின் பஸ், சிறப்பு வகுப்பு கட்டணத்தை ரத்து செய்த தனியார் பள்ளி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கொரோனா எதிரொலியால், மாணவர்களின் பஸ், சிறப்பு வகுப்பு கட்டணத்தை ரத்து செய்த தனியார் பள்ளி


ஆத்துார்: கொரோனா எதிரொலியால், தனியார் பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பஸ், சிறப்பு வகுப்பு கட்டணத்தை ரத்து செய்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டையில், மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 600 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கொரோனா ஊரடங்கால், ஏழை, நடுத்தர குடும்பத்தினர்,
வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.இதனால், பள்ளி நிர்வாகம், 2020 - 21ல், பஸ், சிறப்பு வகுப்புகள் கட்டணத்தை ரத்து செய்து உள்ளதாக அறிவித்துள்ளது.

பள்ளி செயலர் லோகேஷ் கூறியதாவது:

கொரோனாவால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியர், புதிதாக சேரும் மாணவர்களுக்கு, பஸ் கட்டணம், சிலம்பம், கராத்தே, ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற சிறப்பு வகுப்பு கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து உள்ளோம்.

இக்கட்டணம், தலா, 4,000 முதல், 7,000 ரூபாய் வரை இருக்கும். தற்போதைய நிலையில், ஏழை மாணவ - மாணவியர், சிரமத்தில் உள்ளதால், இக்கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என, நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்