கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கான உணவுப்பட்டியல் - ஆசிரியர் மலர்

Latest

 




26/04/2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கான உணவுப்பட்டியல்


சென்னை
சென்னை மாநகராட்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கான உணவுப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 64 அதிகரித்து மொத்தம் 1885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 24 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதில் சென்னை நகரில் 28 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 523 ஆகி உள்ளது.
இவர்களுக்கு அளிக்கப்படும் உணவுப் பட்டியலைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு :
காலை 4 மணி: ரொட்டி, பிஸ்கட்
4.30 மணி: கபசுர குடிநீர்
காலை 10 மணி: கபசுர குடிநீர்

காலை 11மணி: வேகவைத்த சுண்டல்/ வேர்க்கடலை மற்றும் எலுமிச்சை சாறு( உப்பு அல்லது சர்க்கரை)
பிற்பகல் 1 மணி: சாதம், சாம்பார், ரசம், முட்டை பொரியல், தயிர்சாதம்( ஒருநாள் விட்டு ஒருநாள் காரக்குழம்பு)
மாலை 4 மணி: காபி, பிஸ்கட்
இரவு 7.30 மணி: வாழைப்பழம்
இரவு 8 மணி: சாதம், சாம்பார், ரசம் மற்றும் பொரியல்
இரவு 10 மணி; பால் சிறிதளவு பூண்டுடன் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459