சொத்துவரி , குடிநீர் வரியை செலுத்த மூன்று மாத கால அவகாசம் - தமிழக அரசு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 26 April 2020

சொத்துவரி , குடிநீர் வரியை செலுத்த மூன்று மாத கால அவகாசம் - தமிழக அரசு

சென்னை: சொத்துவரி , குடிநீர் வரியை செலுத்த மூன்று மாத கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரசால் மக்கள் அச்சுறுத்தலில் இருந்து வருகின்றனர். சொத்துவரி, குடிநீர் வரி அபராதம் இன்றி செலுத்த 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் வரும் ஜூன் மாதம் 30 ம் தேதி வரையில் கட்டணம், வரி செலுத்த தேவையில்லை என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் கால அவகாசம் அளிப்பதற்கான அரசானையையும் வெளியிட்டுள்ளது