உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு நேரில் வழங்கிய 4ம் வகுப்பு மாணவி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு நேரில் வழங்கிய 4ம் வகுப்பு மாணவி

கொரோனாவானல் வெளிப்படும் மனிதாபிமானம்
உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு நேரில் வழங்கிய 4ம் வகுப்பு மாணவி
திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

திருவண்ணாமலை, ஏப். 26–
கொரோனா நிவாரண நிதிக்கு உண்டியலில் சேமித்த பணத்தை வழங்க ஆசைப்பட்ட 4-ம் வகுப்பு மாணவி கோபிகாவை ஏழை மாற்றுத்திறனாளிக்கு நேரில் வழங்க மாவட்ட கலெக்டர் கந்தசாமி ஏற்பாடு செய்தார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சி, ஓம் சக்தி நகரில் வசித்து வரும் சுரேஷ், சுரியகாந்தி தம்பதியனரின் ஒரே மகள் கோபிகா (வயது 9). திருவண்ணாமலை கேந்திரய வித்யாலயா பள்ளியில் கோபிகா 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கோபிகா கடந்த ஒரு ஆண்டாக ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்களாக தனது உண்டியலில் சேமித்து வந்துள்ளார். தமிழ்நாடு அரசு கொரோனா நிவாரண நிதிக்கு பொது மக்களிடம் நிதியுதவி,
பொருள் பெற்று வருவதை அறிந்த கோபிகா, தனது பெற்றோரிடம் தான் சேமித்து வைத்த உண்டியல் தொகையினை மாவட்ட கலெக்டரினடம் நேரில் சந்தித்து வழங்க ஆசைப்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமியை நேரில் சந்தித்து கோபிகா தனது உண்டியல் சேமிப்பு தொகையை வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் கந்தசாமி கோபிகாவை பாராட்டி இந்த தொகையினை தானன் தெரிவிக்கும் ஒரு ஏழை மாற்றுத்திறனாளிக்கு வழங்க வேண்டும் என வழியனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் கோபிகாவை தனது அலுவலகத்திற்கு வரவழைத் கலெக்டர் கந்தசாமி,
அவரை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை நகராட்சி, புதுவாணியங்குளம் 7-வது தெருவில் வசித்து வரும் ஏழை மாற்றுத்திறனாளி சுகுணா வீட்டிற்கு அழைத்துச் சென்று கோபிகாவை அவரது உண்டியல் சேமிப்பு தொகையை வழங்கச் செய்தார். மேலும், மாவட்ட கலெக்டர் கோபிகாவின் மனிதாபிமானத்தை போற்றும் வகையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். ஏழை மாற்றுத்திறனாளி சுகுணா (வயது 32) பிறவி குறைபாட்டுடன் பிறந்து கால்கள் நடக்க இயலாதவர். இவரது தந்தை உயிருடன் இல்லை, சுகுணா தனது தாய் மற்றும் தம்பி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
சுகுணாவின் அக்கா மற்றும் தங்கை இருவரும் திருமணம் ஆனவர்கள். சுகுணாவின் தம்பி வண்டி மாடு ஒட்டி குடும்பத்தை மிகவும் ஏழ்மையான சுழ்நிலையில் காப்பாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படும் நேரத்தில் 9 வயது சிறுமியின் சேவையை மனப்பான்மை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.