எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? இன்று தஞ்சாவூர் அதிகம். - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? இன்று தஞ்சாவூர் அதிகம்.


தமிழகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது துவக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், கடந்த மூன்று நாட்களாக குறைந்து வருகிறது. தமிழக அரசு கரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்று கரோனா வைரஸின் பாதிப்பு இன்று மேலும் 56 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டதுள்ளது. 
இதனால் கரோனா பதித்த நபர்களின் எண்ணிக்கை இன்று 1,323 ஆக அதிகரித்துள்ளது. பூரண நலன்பெற்று இல்லங்களுக்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.
 இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 108 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக குறைவாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. 
சென்னையில் மேலும் 11 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. திண்டுக்கல்லில் ஒருவர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. 
தேனி மாவட்டத்தில் மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது
. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தலா 17 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. 
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.