ராஜஸ்தானில் சிக்கிய 26,000 மாணவர்கள் .உ.பி மாணவர்கள் மட்டும் சொந்த ஊர் திரும்புகின்றனர்.. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ராஜஸ்தானில் சிக்கிய 26,000 மாணவர்கள் .உ.பி மாணவர்கள் மட்டும் சொந்த ஊர் திரும்புகின்றனர்..


ஊரடங்கில் சிக்கிய 7,000 மாணவர்களை மீட்க ராஜஸ்தானிற்கு 250 பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசு அனுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 7,000 மாணவர்கள் ஐஐடி மற்றும் ஜெஇஇ ஆகிய படிப்புகளின் பயிற்சிக்காக ராஜஸ்தானிற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஊரடங்கால் சொந்த ஊரு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்ட நிலையில், தங்களை சொந்த ஊருக்கு அழைத்துச்செல்லுமாறு #sendusbackhome என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து, அதில் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்நிலையில் அவர்களை சொந்த ஊர் அழைத்துவர உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 250 பேருந்துகள் ராஜஸ்தானிற்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை நாளை காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு உத்தரப்பிரதேசம் திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்ததும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் .

உத்தரப்பிரதேசம் தவிர்த்து, 6,500 பீகார் மாணவர்கள், 4,000 மத்தியப்பிரதேச மாணவர்கள், 3,000 ஜார்க்கண்ட் மாணவர்கள், தலா 2,000 ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாணவர்கள், மேலும் 1,000 வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் ராஜஸ்தானில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.