ஊர் திரும்ப முடியாத பெற்றோர்: உணவின்றி தவிக்கும் இரு மாணவிகள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 29 April 2020

ஊர் திரும்ப முடியாத பெற்றோர்: உணவின்றி தவிக்கும் இரு மாணவிகள்

ஊர் திரும்ப முடியாத பெற்றோர்: பசியால் தவிக்கும் பிள்ளைகள்!

கேரள தோட்ட வேலைக்குச் சென்ற பெற்றோர் ஊரடங்கால் ஊருக்கு வர முடியாததால் போடியில் உள்ள பள்ளி மாணவிகள் பசியால் தவித்து வருகின்றனர்.
போடி குலாலர்பாளையம் போஜன் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் மனைவி முனியம்மாள். இவர்கள் இருவரும் கேரளப் பூப்பாறை அருகே செம்பாலை பகுதியில் ஏலத்தோட்ட வேலைக்குச் சென்றனர்.
கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாத காலமாக சொந்த ஊரான போடிக்கு வர முடியவில்லை.
இவர்கள் மகள்கள் பிரியா, சரண்யா இருவரும் போடியில் உள்ள பள்ளியில் படித்து வசிக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக கையில் காசு இல்லாமல், ரேஷன் கார்டு இல்லாததால் ரேஷனில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து சரண்யா கூறுகையில்,
“ஊரடங்கால் அவர்களும் இங்கு வர முடியவில்லை. நாங்களும் பெற்றோர் உள்ள கேரளாவுக்குச் செல்ல முடியவில்லை. தினமும் உணவு இன்றி சிரமம் அடைகிறோம். மிக முக்கிய பொருட்கள்கூட வாங்க முடியவில்லை. எங்களை பெற்றோர் அல்லது கொடைக்கானலில் வசிக்கும் பெரியம்மாவிடம் அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு, மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும். எங்களுக்கு உதவ 91883 54031 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.