ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சிக்காகச் சென்ற மாணவர்கள் நிலை என்ன? பெற்றோர்கள் கவலை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சிக்காகச் சென்ற மாணவர்கள் நிலை என்ன? பெற்றோர்கள் கவலை


கரோனா பேரிடர் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலான நிலையில், ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சிக்காகச் சென்ற சிக்கியுள்ளனர்.
நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ளது. இந்த மையம் பிரபலமானது என்பதால் இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் அங்கு தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாதிப்பால் ஊரடங்கு அமலான நிலையில் பயிற்சி மையம் மூடப்பட்டது. இங்கு சிக்கிக்கொண்ட உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநில மாணவர்களை அந்தந்த மாநிலங்கள் மீட்டு அழைத்துச் சென்றுவிட்டன.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அங்கு பயிற்சிக்காக சென்ற 79 மாணவர்கள் சிக்கிக்கொண்டனர்
. அவர்கள் தமிழக அரசைச் சென்றடையாததால் அவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை.