கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனக்கு சொந்தமான கல்லூரியில் இடம் ஒதுக்கித் தர தயார் - விஜயகாந்த் - ஆசிரியர் மலர்

Latest

 




20/04/2020

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனக்கு சொந்தமான கல்லூரியில் இடம் ஒதுக்கித் தர தயார் - விஜயகாந்த்


கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனக்கு சொந்தமான கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்து தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பால், உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதால் தொற்று பரவாது என உலக சுகாதார
நிறுவனம் கூறியுள்ள நிலையில், தவறான புரிதலால் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய, தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஒரு பகுதியை ஒதுக்கி தருவதாக அறிக்கை வாயிலாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459