தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்வு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்வு


தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் சார்பாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
தமிழகத்தை பொறுத்த வரையில் நேற்று வரை கரோனா வைரஸின் தொற்றுக்கு சுமார் 621 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று வந்த நபர்கள் என்பது தெரியவந்துள்ளது. 
இந்த நிலையில், இன்று கரோனா வைரஸ் தாக்கத்திற்கு 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும், கரோனா வைரஸின் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்ட நபர்களில் டெல்லிக்கு சென்று வந்த நபர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனில்லாது சென்னையில் அனுமதியாகியிருந்த பெண்மணி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.