வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக வதந்திகளும், பொய்செய்திகளும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்படுகின்றன.
இந்த நிலையில் , கொரோனா தொடர்பான வதந்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் , தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடுகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது , அதிகம் பரப்பப்படும் தகவல்களை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்.
இதற்கு முன்பு, ஒரு தகவலை அதிகபட்சமாக 5 பேர் வரை அனுப்பும் வசதி இடம் பெற்றிருந்தது. சமூக வலைத்தளங்களில் பரவும் பொய் செய்திகளை கட்டுப்படுத்த உலக நாடுகள், பல்வேறு முன் முயற்சிகளை தொடங்கியுள்ள நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் இந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.