சமூக விலகல், ஊரடங்கை பின்பற்றாவிட்டால் ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு நோயத்தொற்றை பரப்ப முடியும்  என்ற அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் தற்போது தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம்  ஊரடங்கு உத்தரவையும்,சமூக விலகலும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. இந்த ஒரு நிலையில் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை கோரியுள்ளதாக நிலையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனும் மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறதாக தகவல்  வெளியாகி உள்ளது
ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு நோயத்தொற்றை பரப்ப முடியும்
சமூக விலகல், ஊரடங்கை பின்பற்றாவிட்டால் ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு நோயத்தொற்றை பரப்ப முடியும் என்றும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. நீட்டிப்பது பற்றி எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை
என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் நிலைமை
இந்த ஒரு நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 621 லிருந்து 690ஆக அதிகரித்து உள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். தற்போது வரை சிகிச்சை அளித்ததில் கொரோனா பாதிப்பில் இருந்து 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே  வேளையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.