கடலூரில் 144 தடை உத்தரவால் உணவு கிடைக்காமல் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதிகளில் உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள் சிலர் பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்
. இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வீடுகளில் உணவுகளை பெற்று உயிர்காத்து வந்தனர்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இவர்களுக்கு சரியான முறையில் உணவு கிடைக்காமல் தவித்து வந்தனர்.
இருப்பினும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது அளித்து வந்த உணவின் மூலம் உயிர் பிழைத்தனர். ஆனால் அவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் அந்த வகையில் கிடைத்த உணவும் நின்றது.

இந்நிலையில் பெண்ணாடம் பகுதியில் உள்ள முருகன் திரையரங்கம் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் உணவின்றி பரிதாபமாக இறந்தார்.
கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் அவர் உணவிற்காக சுற்றித்திரிந்ததாகவும், இறுதியில் பசியால் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் யார் ? எந்த பகுதியைச் சேர்ந்தவர் ? என்ற விவரம் தெரியாத நிலையில், போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Source :புதிய தலைமுறை