30,000 சம்பளம்: தமிழக அரசின் தற்காலிக பணி குறித்து தெரிந்துகொள்வோம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Saturday, 18 April 2020

30,000 சம்பளம்: தமிழக அரசின் தற்காலிக பணி குறித்து தெரிந்துகொள்வோம்


தமிழகத்திலிருந்து கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள்
இன்னும் சில வாரங்கள் தீவிரமாகச் செயல்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக அவசர கால நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தற்காலிகப் பணியாளர்களாக 2,215 இரண்டாம் நிலை பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறையிலிருந்து அரசாணை வெளியாகியுள்ளது.


மாவட்டவாரியாக தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் எண்ணிக்கை
அந்த அறிக்கையின்படி, 12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்த ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மூன்று மாதம் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றும் இவர்களுக்கு மாதம் ரூ.30,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இவர்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்ற தகவலும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. இந்தப் பணியில் சேருவதற்கு, எவ்வாறு அணுக வேண்டும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் சில தினங்களில் மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.