பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

30/04/2020

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை


கொரோனா வைரஸ் காரணமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3-ந் தேதி முடிகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை மே 2-வது வாரத்தில் தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூலமாக பிளஸ்-2 விடைத்தாள்களை திருத்தும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவல் அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்களுக்கு வழங்குவதையும், அந்த பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் தொடங்குவதையும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்திருக்க வேண்டும். வீட்டில் இருந்து விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வந்து செல்ல கலெக்டர் அலுவலகம் மூலம் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு முன்னரும், பின்னரும் ஆசிரியர்கள் கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினியால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான வசதிகளை மையத்தில் செய்ய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459