இந்தியாவில் உட்சபட்சமாக நேற்று ஒரே நாளில் மேலும் ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 552 பேருக்கும், குஜராத்தில் 367 பேருக்கும் புதியதாக நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. தேசிய அளவில் நேற்று மட்டும் 10 சதவீதத்திற்கும் மேலாக புதியதாக நோய்த்தொற்றால்
பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
குறிப்பாக குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்து, தமிழகத்தை தாண்டி தேசிய அளவில் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் நேற்று 10 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.