தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 28 April 2020

தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று


தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டி 2,058 ஆக உயர்ந்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 103 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர தமிழகத்தின் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக புதிதாக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாகவே இருந்து வந்த நிலையில், இன்றைக்கு மட்டும் புதிதாக 121 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.