கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் ரஷ்யா - ஆசிரியர் மலர்

Latest

 




28/04/2020

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் ரஷ்யா

மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 6,411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு 72 பேர் பலியாகியுள்ளனர்.
உலகளவில் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடான ரஷ்யா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான், சீனாவை முந்தியுள்ளது. ரஷ்யாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93,558 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 867 ஆக அதிகரித்தது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் 8வது நாடாக மாறியுள்ள ரஷ்யா, இறப்புகளில் அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள், சீனா, ஈரான், துருக்கி நாடுகளை விட குறைவாக பதிவாகியுள்ளது. சுமார் 14.7 கோடி மக்கள் தொகை கொண்ட ரஷ்யா, 85 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பமும் இதில் அடங்கும்
. கொரோனா காரணமாக கடந்த மார்ச் முதல் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏப்.,30ம் தேதி நிறைவடைகிறது.
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளை கொரோனா மருத்துவமனையாக
மாற்றுவதுடன், பொது இடங்களில் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணியில் ரஷ்யா இறங்கியுள்ளது. ரஷ்யாவில் மே 12ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படலாமெனவும், ரஷ்ய அதிபர் புடின் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிடுவார் என கிரெம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459