தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 104 பேர் பாதிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 29 April 2020

தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 104 பேர் பாதிப்பு


கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல்
கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக இருந்தது. 
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2162 ஆக அதிகரித்துள்ளது
. இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 104 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது