கரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை அரசே சிதைப்பது நியாயமா ? - ஆசிரியர் மலர்

Latest

29/04/2020

கரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை அரசே சிதைப்பது நியாயமா ?


கரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை அரசே சிதைப்பது நியாயமா என ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர்,
ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர் ரா. இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக் கையில் அதிக அக்கறை காட்டுகிறது. தற்போது உலகையே அச்சுறுத்தும் கரோனா தொற்று மார்ச் இறுதியில் தமிழகத்தில் கண்டறிந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், அகவிலைப்படி உயர்வு என்பது ஆண்டு தோறும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான நிலுவை ஏப்ரலில் வழங்கப்படும்.
மேலும், 6 மாதத்திற்குஒரு முறை விலைவாசி உயர்வை அடிப்படையாகக் கொண்டு இந்த வழங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் விலை வாசியை ஒன்றரை ஆண்டுக்கு கட்டுக்குள்
வைத்திருப் போம் என உறுதியளித்தால் அகவிலைப்படிரத்தை நாங்களும் ஏற்கிறோம்.
ஏழைகளுக்கு உதவ நாங்களே முன்வந்துஒருநாள் ஊதியத்தைவழங்க அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரிய செல்வந்தர்கள் இல்லை.
ஏராளமானோர் முதல் தலைமுறை அரசு ஊழியர், ஆசிரியர்கள்.
அவர்கள் வாழ்நாள் சாதனை என்பது வங்கிக்கடன் பெற்று ஒரு சொந்தவீடு கட்டினாலே பெரிது. இவர்களை அரசு கையாளும் போக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
இவர்களை தண்டிக்க அகவிலைப்படி ரத்து, ஏற்கனவே பணிபுரிந்தஒராண்டில் சேமித்த 17 விடுப்பு நாட்களில் 15 நாட்களை அரசிடம் ஒப்படைத்தல் ரத்து,
வருங்கால வைப்புநிதி (சேமிப்பு) க்கானவட்டி குறைப்பு, என, தற்போதைய நெருக்கடியை காரணம் காட்டுவதுஏற்பதாக இல்லை.
மத்திய அரசிடமிருந்து இயற்கை பேரிடர் நிதியை கேட்கலாம். அவசரமாக ஊழியர்களின் வாழ்வாதாரங்களைபறிப்பது கண்டிக் கத்தக்கது.
கரோனா தொற்றை ஒழிக்கஉயிரை பணயம்வைத்து பணிபுரியும் அரசு ஊழியர்களை தியாகிகள் என புகழும் அரசு, அவர்களது வாழ்வாதாரத்தை சிதைப்பது நியாயமா?
தற்போதைய சூழலில்பஞ்சபடி உடனேவழங்காவிட்டாலும் இன்னும் 3 மாதம் கழித்து 6 மாதநிலுவையாக வழங்கப்படும் என அரசாணையில் திருத்தம் செய்து அறிவிக்கவேண்டும். ஆசிரியர்களை பாதிக்கும் அறிவிப்பு களை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459