பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சிக்கல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள், தாங்கள் கூட்டுறவுச் சங்கத்தில் பெற்ற கடனை முழுமையாகச் செலுத்த நிர்பந்திக்காமல், புதிய ஒன்றியத்தில் தவணைத் தொகையைத் தொடர்ந்து பிடிக்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/10/2026

பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சிக்கல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள், தாங்கள் கூட்டுறவுச் சங்கத்தில் பெற்ற கடனை முழுமையாகச் செலுத்த நிர்பந்திக்காமல், புதிய ஒன்றியத்தில் தவணைத் தொகையைத் தொடர்ந்து பிடிக்க உத்தரவு

 

ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற கடன் தொகை முழுவதும் செலுத்தி முடியும் வரை இயற்கை நியதியின் அடிப்படையில், அவர்கள் கடன் பெற்ற கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்திற்கே தொடர்ந்து தவணைத் தொகையைச் செலுத்தவோ அல்லது தனிநபர் விருப்பத்தின் அடிப்படையில் கடன் தொகையை முழுமையாகச் செலுத்திவிட்டு, பணிமாறுதலில் செல்லும் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் புதியதாக கடன் பெற்றுக்கொள்ளவோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

கூட்டுறவு கடன் பெற்று மாறுதல் சென்றவர்கள் புதிய ஒன்றியத்தில் ஊதியம் பெறுவதில் உள்ள சிக்கல் இனி இருக்காது.






No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459