JEE MAINS RESULTS APRIL 2026* குறித்த ஓர் பார்வை - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/04/2026

JEE MAINS RESULTS APRIL 2026* குறித்த ஓர் பார்வை

 


JEE Paper - 1 Results சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.


*JEE Paper 2 A & 2 B Results வெளியாக மேலும் 7-10 நாள்கள் ஆகலாம்.*


*JEE Paper - 1 Result Score card-யில் எதைப் பார்க்கலாம்? எதை பார்க்கக் கூடாது?*


*Total Percentile மட்டும் பார்க்க வேண்டும்.*


Phy Che Maths Percentile தனித்தனியாக கொடுத்திருப் பார்கள். அதனை பார்க்க கூடாது. அதனை Total செய்ய கூடாது. அது Just for Reference.


JEE Mains தேர்வில் எத்தனை Percentile எடுத்தால் Pass?


இந்தியாவில் அதிகம் குழந்தைகள் எழுதும் மிகப்பெரிய தேர்வு NEET. சென்ற வருடம் 2025 ல் சுமார் 20 லட்சத்து 80000 பேர் NEET எழுதினர். அவர்களில் 50th Percentile யில் உள்ள மாணவரோ மாணவியோ அதாவது 10 லட்சத்து 40000 ஆவது Rank ல் உள்ள மாணவர் என்ன மார்க் எடுத்துள்ளாரோ அதுவே NEET Pass Mark ஆகக் கணக்கிடப்படும். அது 720-க்கு 126-ஆக இருக்கலாம். 102-ஆக இருக்கலாம். வெறும் 10 மதிப்பெண்ணாகக் கூட இருக்கலாம்.


ஒவ்வொரு வருடமும் இந்த NEET Pass Mark மாறும். ஏறலாம் அல்லது  இறங்கலாம். கேள்வித் தாளின் கடினத் தன்மை மற்றும் தேர்வு எழுதும் குழந்தைகளின் மீத்திறனைப் பொறுத்து இது மாறுபடும்.


மொத்தம் சுமார் 10 லட்சம் பேர் NEET தேர்ச்சி பெறுவார்கள்.


ஆனால் சுமார் ஒரு இலட்சம் Seats மட்டுமே உள்ளன.


NEET Eligible Marks  கிடைத்தாலும் சுமார் 9 இலட்சம் பேருக்கு Seat கிடைக்க வாய்ப்பிருக்காது.


அடுத்த இந்தியாவின் இரண்டாவது பெரிய தேர்வு CUET. சுமார் 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். No Fail. CUET எழுதும் அனைவரும் Pass தான். ஒரு மார்க் எடுத்தால் கூட Seat கிடைக்கும்.


அதற்கடுத்த 3 ஆவது பெரிய தேர்வு JEE Mains. JEE Mains ல் Pass or Fail கிடையாது. வேறு வகையில்  சொன்னால், JEE தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி தான். சுமார் 11 இலட்சம் பேர் எழுதுகிறார்கள். தேர்வு எழுதும் 11 இலட்சம் பேரும் Pass தான். 


ஆனால் JEE Mains தேர்வு மூலம் நிரப்பப்படும் B.Tech இடங்கள் சுமார் 60 ஆயிரம் மட்டுமே. தேர்வு எழுதிய 11 இலட்சம் பேரும் இந்த 60000 B.Tech., இடங்களை நிரப்ப நடத்தப்படும்.


*JOSAA Counselling ல் கலந்து கொள்ளலாம்.* No Counselling Fees. JOSAA is fully FREE. 


ஒரு Percentile எடுத்தவர் கூட JOSAA Counselling ல் கலந்து கொள்ளலாம். 30 Percentile எடுத்தவர்களுக்கு கூட 60000 இடங்களில் ஒரு இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு.


11 லட்சம் பேரில் 60000 பேர் போக மீதமுள்ள 10,40,000 பேர் என்ன செய்வார்கள்? 


60 - 70 Percentile எடுத்த மாணவர் கூட தங்களுக்கு இடம் கிடைக்காது என்ற அவநம்பிக்கை மற்றும் அத்தை / மாமா / சித்தப்பா / பெரியப்பா / பக்கத்து வீட்டு Aunty / கோவைல படிக்குற சொந்தக்கார அக்கா / Foreignல இருக்குற Uncle இதுபோன்ற அதிமேதாவிகள்  பண்ணுற குழப்பத்தில்


வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஒரு College ல் Token Advance (Admission Fees Rs.10000/-) செலுத்தி  TC Mark Sheet-யை  ஒப்படைத்து விடுவார்கள்.


ஆகவே நம்பிக்கையோடு காத்திருக்கும் 30 Percentile மாணவருக்கு கூட


அக்டோபர் 2026 or நவம்பர் 2026 ல் CSAB Counselling மூலம் Seat கிடைத்து விட மிக அதிக வாய்ப்புகள் உண்டு.


Seat கிடைக்குமோ கிடைக்காதோ என மிகுந்த அச்சத்தில் உள்ள மாணவ மாணவிகள் 


TNEA counselling-யில் உள்ள 38 அரசு கல்லூரிகள் அல்லது


TNGASA வில் உள்ள சுமார் 170 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்


பிடித்த பாடத்தில் அல்லது கிடைத்த பாடத்தில் 


முதலில் Admission Fees செலுத்தி  சேர்ந்து கொண்டால்


JOSAA or CSAB ல் அக்டோபர் 2026 or நவம்பர் 2026 ல் Seat கிடைக்கும் போது


எளிதாக அரசு கல்லூரிகளில் இருந்து TC பெற்று மாறிக் கொள்ள முடியும்.


எத்தனை Percentile எடுத்தால் திருச்சி NIT யில் இடம் கிடைக்கும் ?

97 and above தேவைப்படலாம்.


அப்போ 30 percentile மாணவருக்கு எங்கே இடம் கிடைக்கும் ?


JOSAA கலந்தாய்வில் சுமார் 1 IISc 23 IITs 32 NITs 26  IIITs  46 GFTs என மொத்தம் 128 கல்லூரிகளில் ஏதாவது ஒரு மத்திய மாநில அரசுக் கல்லூரியில் B.Tech., இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு.


*நம்பிக்கையோடும் நேர்மறை சிந்தனையோடும் JEE Mains Result ஐ அணுகுங்கள்.*


மாணவர்களின் நலனில் என்றென்றும் நேர்மையுடன்..

*JK Edu-Care Services*


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459