தமிழக அரசு ஊழியர். ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்தப்படும் என்று கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில் பழைய பென்ஷன் திட்டத்துக்கு பதிலாக உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை (டாப்ஸ்) முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 3ம் தேதி அறிவித்தார். அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட் வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ கோரிக்கை வைத்தது.
தமிழக அரசும் அரசாணைதானே 'இந்த பிடி' என்ற கதையாக, கடந்த மாதம் 10ம் தேதி வெளியிட்டது. இந்த திட்டம் கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதாக அந்த அரசாணை கூறியது.-
அதாவது டாப்ஸ் திட்ட த்தை அறிவித்த ஒரு வாரத்தில் டாப்ஸ் திட்டத்து அரசாணையை வெளியிட்டு, திமுக என்றும் அரசு ஊழியர், ஆசிரியர்களின் பாதுகாவலர் என்பதை இதன் மூலம் விளம்பரம் தேடிக் கொண்டது. ஆனால் அதே அரசாணைக்கான விரிவான விதிகள், தகுதி நிபந்தனைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் அமலாக்க நடைமுறைகள் ஆகியவை அரசால் தனித் தனியாக அறிவிக்கப்படும்' என்று கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே பழைய பென்ஷன் திட்டம் உருவாக்கப்பட்ட போது, 1978ம் ஆண்டு விதிகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிகள் 1978 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தன.
அதேநேரம், 2003ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய பென்ஷன் திட்டத்துக்கு (சிபிஎஸ்) இப்போது வரை எந்த விதியும் வகுக்கப்படவில்லை.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினால் கடந்த மாதம் 3ம் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 10ம் தேதி அரசாணை வெளியிடப்பட்ட 'டாப்ஸ் திட்டம் குறித்து இதுவரை எந்த விதியும் வகுக்கப்படவில்லை. அரசாணையில் விதிகள் வகுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 2 மாதங்களை நிறைவு பெற உள்ள நிலையில் விதியே வகுக்காமல் அரசாணை வெளியிட்டுள்ளது வேடிக்கையான செயல் என்று அரசு ஊழியர்கள் கொதிக்கின்றனர். 'டாப்ஸ்' திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு பாராட்டு விழா நடத்திய ஜாக்டோ-ஜியோ வும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
சத்துணவு ஊழியர்கள்
அதேபோல் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதை முடிவு க்கு கொண்டு வரும் வகையில், கடந்த மாதம் 24ம் தேதி சட்டசபையில் ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கவன்வாடி ஊழியர்களின் பென்ஷன் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதை செயல் படுத்தும் வகையில், கடந்த 13ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதிலும் எந்த விளக்கமும் இல்லா மல் அரசாணை வெளியிட் டது. கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த சிலர் கூறியது:
சத்துணவு மற்றும் அங் கன்வாடி ஊழியர்கள் பென்ஷனை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுவாக அரசாணை வெளியிடும் போது எந்த தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று குறிப்பிடுவார்கள். இந்த அரசாணையில் எந்த தேதியில் இருந்து அம லுக்கு வரும் என்று குறிப் பிடவில்லை. உயர்த்தப் பட்ட பென்ஷனுக்கான தொகை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதா? எப்போது அனுப்பி வைக்கப்படும் என்ற விவரம் தெரிய வில்லை. இந்த அரசாணையால் எந்த பயனும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்.



No comments:
Post a Comment