சென்னை சைதாப்பேட்டையில் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகத்துல ஒரு ஊழியர் இருக்கார்... இவர், தன்னை துணை ஆய்வாளர்னு சொல் லிண்டு, கல்வி இயக்குநரக அலுவலகத்துல வலம் வரார் ஓய்...
"அங்க இருக்கற சில ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்திருக்கார்.... அதோட, 'பள்ளிக்கல்வி அமைச்சரின் உதவியாளர் சுள் எல்லாம் எனக்கு நன்னா தெரியும்'னு சொல்லி, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இட மாறுதல் வாங்கி தரதா. 5 லட்சம் முதல் 20 லட் சம் ரூபாய் வரை, 20 பேரிடம் வசூல் பண்ணியிருக்கார் ஓய்...
"ஆனா, யாருக்கும் இடமாறுதல் வாங்கி தரல... இவரிடம் ஏமாந்த சிலர், தற் கொலைக்கு முயற்சி பண்ணி பிழைச்சி ருக்கா... போலீஸ் மற் றும் சிறை துறையில் பணிபுரியும் ரெண்டு பேரே, தங்களது குடும்பத்தாருக்காக இவரிடம் பணம் குடுத்து ஏமாந்திருக்கா ஓய்....
"மோசடி ஊழியர் மீது மாவட்ட கல்வி அலுவலர், பள்ளிக் கல்வி இயக்குநர் வரை புகார்கள் போயும். அவர் மீது எந்த நடவ டிக்கையும் எடுக்கல..." என்ற குப்பண்ணாவே, "இப்படி உட்காரும்.... நாங்க கிளம்பறோம் ஓய்..." என்றபடியே நகர, மற்றவர்களும் எழுந்தனர்.



No comments:
Post a Comment