ஆசிரியர் பயிற்றுநர்கள் பற்றாக்குறை: அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/11/2025

ஆசிரியர் பயிற்றுநர்கள் பற்றாக்குறை: அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்

 தமிழகத்தில், ஆசிரியர் பயிற்றுநர்கள் பற்றாக்குறை காரணமாக, அரசின் மாணவர் நலத் திட்டங்கள், பள்ளிகளில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.


அனைவருக்கும் கல்வி திட்டமும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமும் இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள, 414 ஒன்றியங்களில், 3,510 குறுவள மையங்கள் இயங்கி வருகின்றன.


காலி பணியிடங்கள் ஒவ்வொரு குறுவள மையத்திலும், ஒரு ஆசிரியர் பயிற்றுநர் பணியிடம் உள்ளது. அந்த வகையில், ஒரு குறுவள மையத்திற்கு உட்பட்டு, 10 முதல் 15 அரசுப் பள்ளிகள் உள்ளன.


இந்த அரசுப் பள்ளிகளில், தமிழக அரசின் மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து, ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்க வேண்டும்.


மேலும், கற்றல் - கற்பித்தல் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்தும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி வழங்குவர்.


ஆனால், தமிழகத்தில் மொத்தமுள்ள, 3,510 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில், 600 காலியாக இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.


குறிப்பாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நாமக்கல் உட்பட, 18 மாவட்டங்களில் உள்ள குறுவள மையங்களில், அதிகளவில் காலிப் பணியிடங்கள் உள்ளன. சில ஒன்றியங்களில், ஆசிரியர் பயிற்றுநர் இல்லாத நிலை உள்ளது.


இதனால், தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக, ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459