TNPSC, SSC, IBPS, RRB பயிற்சி அறிவிப்பு : கலைஞரின் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் இலவசப் பயிற்சி - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/10/2025

TNPSC, SSC, IBPS, RRB பயிற்சி அறிவிப்பு : கலைஞரின் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிப்பட்டி கிராமத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில், TNPSC, SSC, IBPS, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழக இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது. மொத்தம் 200 ஆர்வலர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி குறித்த விவரங்கள்: 

பயிற்சி காலம்: ஆறு மாத முழுநேரப் பயிற்சி. 

தகுதிகள்: குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். 

வசதிகள்: பயிற்சி மையத்தில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை. விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பம்: இணையவழியாக விண்ணப்பங்கள் பெறப்படும். இணையதளம்: www.cecc.in விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்: 13.10.2025 முதல் 27.10.2025 வரை

. கூடுதல் விவரங்கள்: மேற்கண்ட இணையதள முகவரியில் அல்லது 04553291269 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 

தேர்வு முறை:தேர்வு வழிகாட்டிகள் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். 

 பயிற்சி தொடங்கும் நாள்: பயிற்சி வகுப்புகள் நவம்பர் 2025 முதல் தொடங்கப்படும்.

2 comments:

  1. If lessons in the shapes of video 's are posted for all competitive examinations it will reach numerous aspirants. Pdf of books are posted with play-back explanation. . .. all job seekers will be guided properly and they would win laurels. It require lot of efforts on the part of Government.Will the Government do the help?

    ReplyDelete
  2. So many A cadadies are doing excellent services for job seekers for cash payments. Government can launch a ambicious programme to provide study materials with play back explanations Videos . .. . and all service on line free of costs. If the Government rose to the occasion all Private Academies will shut their business.

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459