1. அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரநிலை அறிக்கையை பயன் படுத்த வழிகாட்டுதல்கள் வெளி யிடப்பட்டுள்ளன.
2. இதுதொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக் கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற் றறிக்கை விவரம்:
3. எண்ணும் எழுத்தும் திட்டத் தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் | முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக் கும் தரநிலை அறிக்கை அச் சிட்டு அனைத்து மாவட்டங்களுக் கும் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப
4. அரசுப் பள்ளிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். இந்த அறிக் கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வழி காட்டுதல் வெளியிடப்பட்டுள் ளது. அதை பின்பற்றி செயல்படு மாறு தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.
5. இதுதவிர, தரநிலை அறிக்கை யில் மாணவர்களின் அடிப்படை விவரங்களை நிரப்பி. அவரது பாஸ்போர்ட் அளவு புகைப் படத்தை ஒட்ட வேண்டும். ஒவ் வொரு பருவத்திலும் மொத்த வேலை நாட்கள், மாணவர் பள் ளிக்கு வந்த நாட்களின் எண் ணிக்கையை நிரப்ப வேண் டும். திறன் அடிப்படையிலான பகுதிகள், மொழித் திறன்கள். கணிதம், அறிவியல், சமூக அறி
6. வியல் திறன்களில் குழந்தையின் தரநிலையை (ஏ, பி, சி) பதிவு செய்ய வேண்டும்.
7. இதேபோல. கல்வி இணைச் செயல்பாடுகள். விளையாட்டு பங்கேற்பு. குழுப்பணி, படைப் பாற்றல் போன்ற பகுதிகளில் குழந்தையின் ஈடுபாட்டை கருத் தில் கொண்டு, அதற்கான தரநிலையை பதிவுசெய்ய வேண் டும். மேலும், அதில் ஆசிரியர் குறிப்பு. பெற்றோரின் கருத்துப் பதிவு. கையொப்பம் போன்ற பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. மதிப்பெண் அட்டையை பெற் றதும் பெற்றோர் தங்கள் கருத் துகளை எழுத ஊக்கமளிக்க வேண்டும்.
. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.


No comments:
Post a Comment