கடும் குளிரிலும் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/10/2025

கடும் குளிரிலும் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள்

 


அரசு உதவிபெறும் பள்ளிகளில் வருங்கால வைப்புநிதி கணக்கிட்டு வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் ஓட்டப்பிடாரம் வட்டார  கல்வி அலுவலகத்தில் 10 ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



காத்திருப்பு போராட்டம்

மணியாச்சி ஆ.சி  ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி அமல்ராஜ் நவமணி அடுத்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெறுகிறார். அவருக்கு ஆசிரியர் பயிற்சி புத்தகத்தை உண்மைதன்மை அறியும் பொருட்டு வட்டார  கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்தப் புத்தகத்தை  காணவில்லை என்று வட்டார கல்வி  அலுவலர்கள் கூறியுள்ளனர். இதை | கண்டித்து நேற்று ஓட்டப்பிடாரம் தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.



கோரிக்கை


அப்போது காணாமல் போன அந்த ஆசிரியரின் உண்மைத்தன்மை புத்த கத்தை கண்டுபிடித்து தர வேண்டும், இதற்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகள் வருங்கால வைப்பு நிதி கணக்கீகிட்டுதாள் வழங்கவேண்டும்

உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க வட்டாரத் செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்டச்செயலாளர் கலை உ டையார், மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் உட்பட 10 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இரவு உணவை வெளியில் இருந்து வாங்கி வரச்செய்து, அங்கேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இது ஓட்டப்பிடாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459