ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/09/2025

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

 dinamani%2F2025-06-25%2Fdsd8ya8a%2Fdinamaniimport20231212originalcbseeee083928

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பை முடித்து பிளஸ் 1 பயிலும் மாணவிகள் இணையதளத்தில் அக். 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தகுதிபெறும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும். பெண் குழந்தைகளிடம் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459